.webp)
Colombo (News 1st) அதிகாரிகளின் பற்றாக்குறை காணப்படுகின்ற போதிலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்குரிய ஆவணங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் தபால் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த செயற்பாடுகளுக்கான கடிதங்களை விநியோகிப்பதற்கு 8000 ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஊழியர்களின் பற்றாக்குறை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.