Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியிலிருந்து தாம் விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இன்னும் 4 மாதங்களில் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
தனது தீர்மானம் குறித்து இவ்வார இறுதியில் நாட்டு மக்களிடம் தௌிவுபடுத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தமை பெரும் கௌரவத்திற்குரிய விடயம் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கும் ஜோ பைடன் ஒப்புதலளித்துள்ளார்.
இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் 78 வயதான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.