.webp)
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று(21) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது 9ஆம் பிரிவு பொலிவேரியன் சுனாமி மீள்குடியேற்ற பகுதியை சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.