மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

by Bella Dalima 22-06-2024 | 4:27 PM

Colombo (News 1st) நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் கடுங்காற்று வீசுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.