.webp)
Colombo (News 1st) மன்னார் தீவின் நுழைவுப் பகுதியான தாம்போதி பாலத்திற்கு அருகில் இருந்த பிரதான சோதனைச்சாவடி தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர், மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்தார்.
மன்னார் தீவின் நுழைவுப் பகுதியான தாம்போதி பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனைச்சாவடி இன்று காலை அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமாரவிடம் வினவியபோது, தற்காலிகமாகவே குறித்த பிரதான சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாகவும் தேவையேற்படின் மீண்டும் அவ்விடத்தில் சோதனைச் சாவடியை அமைப்பதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் கூறினார்.