.webp)
Colombo (News 1st) பிரதான மற்றும் புத்தளம் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மார்க்கங்களில் பயணிக்கும் 3 ரயில்கள் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகிய காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மீரிகம மற்றும் வெயாங்கொடை இடையே ரயிலொன்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினருகே அலுவலக ரயிலொன்றும் புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் ரயிலொன்று நீர்கொழும்பு ரயில் நிலையத்திற்கருகிலும் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில்களை மீள செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.