'நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ஆராய தெரிவுக்குழு'

பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி

by Staff Writer 18-06-2024 | 1:50 PM

Colombo (News 1st) பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(18) ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகள், பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கு சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என ஜனாதிபதி இதன்போது கூறினார்.

ஆகவே இது குறித்து, பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றின் ஊடாக ஆராயப்பட வேண்டுமென ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.