ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று(18) விசேட உரை

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று(18) விசேட உரை

by Staff Writer 18-06-2024 | 6:36 AM

Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று(18) காலை 9.30 க்கு கூடவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.

இதனிடையே, இன்று முற்பகல் 9.30 முதல் 10.30 வரை காலம் வாய்மொழி மூல வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணி முதல் 5.30 வரை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.