.webp)
Colombo (News 1st) ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்திற்கு 6 மாத சேவை நீடிப்பிற்கான அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் சதி காணப்படுவதாக தெரிவித்து அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.