மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு

மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு ; கரையோர மார்க்கத்தில் தொடர்ந்தும் தாமதம்

by Rajalingam Thrisanno 14-06-2024 | 9:57 AM

மலையக மார்க்கத்துடனான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் நேற்று(13) தலவாக்கலை - வட்டகொடைக்கு இடையில் தடம் புரண்டதால் குறித்த மார்க்கத்துடனான ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, ரயில் தடம் புரண்டதால் கரையோர மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று காலை ரயிலொன்று தடம் புரண்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

இரண்டு திசைகளிலும் ரயில் சேவை முன்னெடுக்கப்படும் கரையோர ரயில் மார்க்கத்தில் தற்போது ஒரு திசையில் மாத்திரமே போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்றது.