2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையை இன்று(14) ஆரம்பிப்பதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று(14) காலை 06 மணி முதல் www.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.