கொஹூவல முச்சந்தியில் வீதித்தடங்கல்

கொஹூவல முச்சந்தியில் வீதித்தடங்கல் - மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

by Rajalingam Thrisanno 14-06-2024 | 10:26 AM

கொஹூவல முச்சந்தியின் மேம்பால நிர்மாணப்பணிகள் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து 2 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாளை(15) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை இந்த வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஹொரணை மற்றும் கொழும்பு பிரதான வீதி பொதுப்போக்குவரத்து வாகனங்களுக்காக மாத்திரம் திறக்கப்பட்டிருக்குமெனவும் ஏனைய வாகனங்கள் மாற்றுவீதிகளில் பயணிக்க வேண்டுமெனவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வீதியூடாக பயணிக்கும் கனரக வாகனங்கள் கொஹூவல பாலம் ஊடாக உட்பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் கொஹூவல முச்சந்தி ஊடாக ஹொரணை - கொழும்பு பிரதான வீதிக்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளை இயலுமானவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.