காத்தான்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பெண் காயம்

by Bella Dalima 14-06-2024 | 7:27 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - காத்தான்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்

இன்று (14) காலை 10.30 அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது

சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டினை முன்னெடுத்து விட்டு தப்பிச்சென்ற காட்சிகள் அங்கிருந்த CCTV-இல் பதிவாகியுள்ளது. 

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 34 வயதான பெண் காயமடைந்துள்ளார். 

காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர். 

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 43 வயதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 


 

ஏனைய செய்திகள்