தெகிடி பட நடிகர் பிரதீப் K.விஜயன் காலமானார்

தெகிடி பட நடிகர் பிரதீப் K.விஜயன் காலமானார்

by Bella Dalima 13-06-2024 | 3:38 PM

Colombo (News 1st) தெகிடி, மேயாத மான், லிப்ட், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் K.விஜயன் உயிரிழந்தார். 

வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் கதாபாத்திரங்களில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். 

திருமணமாகாத இவர் சென்னை - பாலவாக்கம், சங்கராபுரம் முதல் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (12) முதல் இவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், சந்தேகமடைந்த நண்பர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார், அவர் குளியலறையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அவரது தலையில் காயமும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, பிரதீப் விஜயனின் உடலை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

அவர் இரண்டு தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது. 

பப்பு என அழைக்கப்படும் பிரதீப் விஜயன், 2013 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இறுதியாக அவர் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.