கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று(13)

by Staff Writer 13-06-2024 | 12:13 PM

Colombo (News 1st) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 190ஆவது வருடாந்த திருவிழா இன்று(13) நடைபெறுகிறது.

கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமையில் இன்று காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து மாலை 5.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசிர்வாதம் இன்றிரவு(13) நடைபெறவிருக்கிறது.