.webp)
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன், துப்பாக்கி கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு கைத்துப்பாக்கியொன்றைக் கொள்வனவு செய்யும் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஹண்டர் பைடன் பொய்யுரைத்ததாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தாம் குற்றமற்றவரென வாதிட்ட ஹண்டர் பைடன், அந்த நேரத்தில் தாம் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.
ஆகவே துப்பாக்கிக் கொள்வனவிற்கான விண்ணப்பப்படிவத்தில் தாம் உண்மையையே கூறியுள்ளதாகவும் வாதிட்டுள்ளார்.
எனினும் 3 மணித்தியால வாதப்பிரதிவாதங்களின் பின்னர் ஹண்டர் பைடன் குற்றவாளியென 12 யூரர்கள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.
பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியொருவரின் மகன் குற்றவாளியாக தண்டிக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பை அடுத்து ஹண்டர் பைடனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூரி குழாத்தின் தீர்ப்பை மதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.