.webp)
Colombo (News 1st) குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறைத்தின் தெற்கில் உள்ள மங்காஃப் (Mangaf) மாவட்டத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிகளவில் வௌிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்திலேயே தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (12) அதிகாலை பரவிய தீயில் 15 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளதுடன், தீ பரவியமைக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கட்டடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்துள்ளதுடன், அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ளனர். புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி பலர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் அடங்குவதாக தகவல் வௌியாகியுள்ளது.
தீ விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட துணை பிரதமர் Sheikh Fahad al-Yousuf al-Sabah, கட்டட உரிமையாளரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.