எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

by Bella Dalima 31-05-2024 | 9:40 PM

Colombo (News 1st) இன்று (31)  நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும். 

ஒரு லிட்டர் லங்கா ஒட்டோ டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.

ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 202 ரூபாவாகும்

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு நிகராக எரிபொருளின் விலை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC மற்றும்Sinopec நிறுவனங்கள் அறிவித்துள்ளன