சாவகச்சேரி - புத்தூர் வாகன விபத்தில் இளைஞர் பலி

சாவகச்சேரி - புத்தூர் வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 27-05-2024 | 2:26 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - புத்தூர் வீதியின் மரத்தடி பகுதியில் நேற்றிரவு(26) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதிலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 22 வயதான இளைஞன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.