மாங்குளம் வைத்தியசாலையில் புதிய பிரிவு

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு

by Chandrasekaram Chandravadani 26-05-2024 | 7:29 PM

Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் ஜனாதிபதியால் இன்று(26)  திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது 2017ஆம் ஆண்டு இந்த நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் ஜனாதிபதியால் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 4,500 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.