.webp)
Colombo (News 1st) கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்லைன் வீதி - பண்டாரநாயக்க சுற்றுவட்டம் அருகில் நேற்று(25) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
பேலியகொடையை சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 18 வயதான மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.