நான்காவது தடவையாக சாம்பியனான யுபுன் அபேகோன்

அன்ஹால்ட் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நான்காவது தடவையாக சாம்பியனான யுபுன் அபேகோன்

by Bella Dalima 25-05-2024 | 9:59 PM

Colombo (News 1st) ஜெர்மனியில்  நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் சாம்பியனானார்.

பந்தயத்தை 10.16 விநாடிகளில் நிறைவு செய்த அவர், குறித்த வெற்றியை பதிவு செய்தார்.

முன்னதாக 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யுபுன் சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்திருந்தார். 

இதனிடையே, 2024 பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் இடம்பெறுகின்றன. 

இந்த போட்டியின் F 63 குண்டு எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித பண்டார பதக்கமொன்றை வென்றார். 

14.27 மீட்டர் தூரத்திற்கு குண்டை எறிந்து அவர் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.