ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

by Bella Dalima 25-05-2024 | 9:45 PM

Colombo (News 1st) சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன தனது 83 ஆவது வயதில் இன்று (25) காலமானார்.

1965 ஆம் அண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்த மறைந்த காமினி மாரப்பன, 1990 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

அன்னார் கல்கிசை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். 

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பணிப்பாளராகவும், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் முதலாவது தலைவராகவும் செயற்பட்ட அன்னார், தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராகவும், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.