தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி; 54 பேர் காயம்

by Bella Dalima 23-05-2024 | 5:04 PM

Mexico: மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  54 பேர் காயமடைந்துள்ளனர். 

மெக்சிகோவின் வடக்கில் உள்ள  San Pedro Garza García நகரில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணமான Nuevo Leon-இல் உள்ள மான்டேரியின் புறநகர்ப்பகுதியான  San Pedro Garza García-வில் நேற்று வீசிய பலத்த காற்றின் போது, பிரசார மேடை சரிந்துள்ளது. 

குடிமக்கள் இயக்கம் ( Citizens' Movement) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் Jorge Álvarez Máynez-இன் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையே சரிந்துள்ளது. 

குடிமக்கள் இயக்கம் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தனக்கு காயம் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் Jorge Álvarez Máynez தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Nuevo Leon மற்றும் பிற வட மாநிலங்களில் சூறாவளி வீசக்கூடும் என்று மெக்சிகோவின் வானிலை சேவை முன்னதாக எச்சரித்திருந்தது.