இலங்கையின் சமித்த துலான் புதிய உலக சாதனை

பரா உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையின் சமித்த துலான் புதிய உலக சாதனை

by Bella Dalima 21-05-2024 | 7:24 PM

Colombo (News 1st) 2024 பரா உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் (World Para Athletics Championships) F44 பிரிவு ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் 66.49 மீட்டருக்கு அவர் திறமையை வௌிப்படுத்தி இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இதனிடையே, பரா உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் F64 பிரிவு ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான் வௌ்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை இந்தியா பெற்றிருந்தது.

2024 பரா உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகள் ஜப்பானின்  Kobe-இல் இடம்பெற்று வருகின்றது.