Colombo (News 1st) போரை நிறுத்துமாறு கோரி கண்ணீர் விட்டு அழும் பாலஸ்தீன சிறுவனின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தயவுசெய்து போரை நிறுத்துங்கள். இங்கு மனிதர்களை பார்க்க முடியவில்லை. எங்களுக்கென எதுவும் இல்லை. நாங்கள் இடம்பெயர்ந்து வருகிறோம். காசாவில் மக்கள் மடிந்து வருகின்றனர். ஆனால் உலகம் எங்களிடம் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் எங்களிடம் போர் நிறுத்தம் என்கின்றனர். ஆனால், அதை செய்வதில்லை, என அச்சிறுவன் அழுதபடி கூறுகின்றான்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
காஸா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 35,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து, தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயரும் நிர்பந்தத்தில் தள்ளப்பட்டனர்.