4 இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 4 இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது

by Staff Writer 20-05-2024 | 9:49 PM

Colombo (News 1st) ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 4 இலங்கை பிரஜைகள், இந்தியாவின் அகமதாபாத் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ந்திய பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் இவர்கள் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று(19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி தகவல் கிடைத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பை சேர்ந்த 27, 33, 35 மற்றும் 43 வயதான நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நால்வரின் தொலைபேசிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் பாகிஸ்தானில் உள்ள முகவர்கள் தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய சில ஆயுதங்களை வழங்க அவர்களுக்கு உறுதியளித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.