விஜயதாச, கீர்த்தி உடவத்தவிற்கு மீள தடையுத்தரவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மற்றும் பதில் பொதுச் செயலாளருக்கு மீண்டும் தடையுத்தரவு

by Staff Writer 20-05-2024 | 4:02 PM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு இன்று(20) மீண்டும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோர் இன்று(20) முதல் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி வரை தமது பதவிகளில் செயற்படுவதைத் தடுத்து நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் கடமைகளை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவிப்பதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் வித்தான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.