.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - புத்தூரில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூர் - மீசாலை பிரதான வீதியில் இன்று(20) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 23 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.