உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

by Staff Writer 20-05-2024 | 2:33 PM

Colombo (News 1st) உக்ரைனில் ஏற்படும் உயிரழிவுகளுக்கு நிதி வழங்குவதற்கு தயாராகவுள்ள வடதுருவ நாடுகள், காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கு நிதி வழங்க தயங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய வரி ஏய்ப்பு தொடர்பான சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் அந்த இலாபத்தின் மீது காலநிலை மாற்ற நிதியத்திற்காக 10 வீத வரி விதிக்கும் யோசனையை இலங்கை முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.