மின் கட்டணங்களை குறைக்க முடியும்

இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என்கிறார் பிரதமர்

by Bella Dalima 18-05-2024 | 4:28 PM

Colombo (News 1st) அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

உமா ஓயா மின்னுற்பத்தி திட்டத்தினூடாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 120 மெகாவாட் மேலதிக மின்சாரம் கிடைக்கின்றமை கட்டணக் குறைப்பு விடயத்தில் நேரடி தாக்கம் செலுத்துவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். 

இதற்கமைய, மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 

கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.