சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பு

சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பு

by Bella Dalima 16-05-2024 | 3:20 PM

Singapore: சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணா் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டாா்.

51 வயதாகும் அவா், இதுவரை நாட்டின் துணை பிரதமராக இருந்து வந்தாா். 

சுமாா் 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் பிரதமராக பொறுப்பில் இருந்த 72 வயதான Lee Hsien Loong ஓய்வை அறிவித்த பின்னர் புதிய பிரதமராக  லாரன்ஸ் வோங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இருவரும் அங்கத்துவம் வகிக்கும் PAP எனப்படும் People's Action Party ஆனது 50 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கப்பூரில் ஆட்சி செலுத்தி வருகிறது. 
 
சிங்கப்பூர் அதிபா் தா்மன் சண்முகரத்னத்தால் பிரதமராக புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட லாரன்ஸ் வோங், நாட்டின் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதிய பிரதமருக்கு பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலேசிய பிரதி பிரதமர் Zahid Hamidi, ஐப்பான் பிரதமர் Fumio Kishida, அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளர் Antony Blinken, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் போன்றோர் சிங்கப்பூரின் புதிய பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.