தரவரிசையில் வனிந்துவும் ஷாகிப்பும் முதலிடத்தில்

ICC T20I சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்கவும் ஷாகிப் அல் ஹசனும் முதலிடம்

by Bella Dalima 15-05-2024 | 4:52 PM

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண T20 போட்டிகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளன. 

இந்நிலையில், சர்வதேச T20 போட்டிகளின் சகலதுறை வீரர்களுக்கான ICC தரவரிசையில் இலங்கையின் வனிந்து ஹசரங்கவும் பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசனும் முதலிடத்தில் உள்ளனர். 

T20I சகலதுறை வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து வீரர்களையும் வெறும் 23 தரவரிசை புள்ளிகள் மாத்திரமே பிரிக்கின்றன. 

உலகக்கிண்ண T20 போட்டிகள் இன்னும் 17 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன், இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்கவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.

இருவரும் 228 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 

சிம்பாப்வேக்கு எதிரான பங்களாதேஷின் சமீபத்திய ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரின் போது  ஷாகிப் அல் ஹசன் 3 தரவரிசைப் புள்ளிகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.