உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி அமெரிக்கா பயணம்

by Staff Writer 14-05-2024 | 2:07 PM

Colombo (News 1st) 2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை குழாம் இன்று(14) நியூயோர்க் நோக்கி பயணமானது.

இலங்கை அணி இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதலாவது சுற்றில் D குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 2ஆம் திகதி அமெரிக்காவின் டலஸில் ஆரம்பமாகவுள்ளது.

தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ளது.