இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூவ் பெட்ரிக் மட்டக்களப்பு விஜயம்

by Bella Dalima 30-04-2024 | 5:47 PM

Colombo (News 1st) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூவ் பெட்ரிக் (Andrew Patrick) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இன்று (30) விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடபட்டன. 

இதனிடையே, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்  அன்ட்ரூவ் பெட்ரிக், ஏறாவூர் நகர சபைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து அவர் கலந்துரையாடினார். 

இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கலந்துரையாடல் அமைந்ததாகவும், விவசாயிகள், மீனவர்களின் பிரச்சினைகள், இளையோர் வேலைவாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாகவும் அலி ஸாஹிர் மௌலானா குறிப்பிட்டார். 
 

ஏனைய செய்திகள்