சுற்றுலா பயணிகளிடம் அதிகக் கட்டணம் அறவிட்டால் கைது

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிகக் கட்டணம் அறவிடும் முச்சக்கரவண்டி, வாடகை வாகன சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

by Bella Dalima 20-04-2024 | 6:40 PM

Colombo (News 1st) வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் அறவிடும் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். 

அவ்வாறான நபர்களை அடையாளம் காண்பதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.