ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அம்பேவல பண்ணைக்கு கண்காணிப்பு விஜயம்

by Bella Dalima 20-04-2024 | 7:21 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அம்பேவல  பண்ணைக்கு இன்று (20) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்ணையின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன் பின்னர்  ஊழியர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பேவல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள படிப்படியான வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பையும் பாராட்டினார்.

பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது ஜனாதிபதி எடுத்துக்காட்டியதாக ஜனாதிபதி ஊடப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அம்பேவல பால் பண்ணையைப் பார்வையிட வருகை தந்திருந்த உள்நாட்டு, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து அளவளாவினார்.