Colombo (News 1st) நேற்றிரவு(17) இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த இருவரும் நொச்சியாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, திசா வாவியில் இருந்து நேற்று(17) பிற்பகல் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.