மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிப்பு

சுதந்திரக் கட்சி தவிசாளராக செயற்பட மைத்திரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு மேலும் நீடிப்பு

by Staff Writer 18-04-2024 | 12:56 PM

Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட  தடையுத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என்பதால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான நிரந்தர தடையுத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று(18) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுகின்றமை கட்சியின் யாப்பை மீறுவதாக அமைந்துள்ளதென சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.