Colombo (News 1st) களுத்துறை தெற்கு - இசுரு உயன பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டிற்கு அருகிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போதே பூட்டியிருந்த வீட்டினுள் இருந்து 65 மற்றும் 79 வயதான இரண்டு பெண்களின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.