Colombo (News 1st) நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
கொரியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.