Colombo (News 1st) சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிர்மாணப் பணிகளை சீன நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் W.S.சத்யானந்தா குறிப்பிட்டார்.
கொட்டாவ, மஹரகம, பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவை பகுதிகளில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் 1996 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்காக சீன அரசாங்கம் 24.48 பில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நிர்மாணப் பணிகளை இரண்டரை வருடங்களில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்காக இந்த வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.