இன்று முதல் HD தொழில்நுட்பத்தில் சிரச TV

by Staff Writer 02-04-2024 | 12:49 PM

Colombo (News 1st) இரண்டு தசாப்தங்களுக்கு அதிக காலமாக நாட்டின் பார்வையாளர்களுக்கு புதிய தொலைக்காட்சி அனுபவத்தை வழங்கிய சிரச TV இன்று(02) முதல் மிக துல்லியமான HD தொழில்நுட்பத்தின் ஊடாக உங்கள் இல்லத்திரைகளை அலங்கரிக்கவுள்ளது.

சிரச TV HD தொழில்நுட்ப ஔிபரப்பை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு தெபானம சிரச ஔிபரப்பு மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

HD தொழில்நுட்பத்தின் ஊடாக முன்பை விடவும் மிகத்தௌிவான, துல்லியமான, நேர்த்தியான காட்சிகளை பார்வையிடும் வாய்ப்பு நாடளாவிய ரீதியிலுள்ள மக்களுக்கு கிட்டவுள்ளது.

இதற்கான நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல், MTV பிரதம செயற்பாட்டு அதிகாரி யசரத் கமல்சிறி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.