வெலிகம துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

வெலிகம துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு: உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் காயம்

by Staff Writer 31-12-2023 | 2:26 PM

Colombo (News 1st) வெலிகம - பெலேன பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் பெலென பகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் குழுவொன்று துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.