.webp)
-743668-514304.jpg)
Colombo (News 1st) கடந்த 2 வாரங்களாக முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பில் 20,797 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1018 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 189 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த 4,584 சந்தேகநபர்களில் 1,625 பேர் யுக்திய சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி 858 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.
