.webp)

Colombo (News 1st) கிளிநொச்சி - பளை பகுதியின் A9 வீதியில் நேற்றிரவு(30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
