மலையக தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தி; இந்திய மத்திய அரசினால் விசேட முத்திரை வௌியீடு

by Staff Writer 30-12-2023 | 7:28 PM

Colombo (News 1st) இந்தியாவில் இருந்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை 
முன்னிட்டு இந்திய மத்திய அரசாங்கத்தினால் இன்று (30) விசேட முத்திரையொன்று வௌியிடப்பட்டது.

இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் புது டெல்லி அலுவலகத்தில் இன்று அதற்கான நிகழ்வு நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  ஏற்பாட்டில் நினைவு முத்திரை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்திய தபால் திணைக்களத்தினால்  இந்த நினைவு முத்திரை  வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வின் பிரதம அதிதியாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் J.P. நட்டா கலந்துகொண்டிருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதனையடுத்து, மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.