இலங்கை குழாம் அறிவிப்பு

சிம்பாப்வேக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

by Staff Writer 30-12-2023 | 7:59 PM

Colombo (News 1st) சிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் ஒருநாள் மற்றும் T20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஒருநாள் போட்டிக்கான அணித்தலைவராக குசல் மெண்டிஸ் செயற்படவுள்ளார்.

T20 குழாமின் புதிய தலைவராக வனிது ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்தும் நிஸங்க, தசுன் ஷானக்க, அகில தனஞ்சய, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் இரு அணிகளிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட இடைவேளையின் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோ ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஜனித் லியனகே உள்ளிட்ட பல புதிய வீரர்கள் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மூத்த வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, பானுக்க ராஜபக்ஸ, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதிஷ பத்திரன ஆகியோர் T20 அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.