அறுவை சிகிச்சையின் பின்னர் பெண் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சையின் பின்னர் பெண் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

by Bella Dalima 30-12-2023 | 6:33 PM

Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னரே தகவல்களை வௌியிட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

அவருக்கு ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்-டை-ஒக்சைடு கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.