அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

by Bella Dalima 30-12-2023 | 7:39 PM

Colombo (News 1st) அனர்த்தங்கள் காரணமாக கடமைக்கு சமூகமளிக்க முடியாது போன தினங்களுக்கு அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஆகியன காரணமாக தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்த விசேட விடுமுறையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள கிராம அதிகாரியின் பரிந்துரையுடன் கூடிய விடுமுறை கோரிக்கையை, நிறுவன தலைவர்களுக்கு அனுப்பி, விண்ணப்பிக்க வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.